துரைமுருகனுக்கா இப்படி நடக்க வேண்டும்? அதிர்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்!
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தி.மு.க'வினர் கலக்கமடைந்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஸ்டாலினுக்கு கொரோனோ இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க மகளிர் அணி செயலாளரும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் தனிமைப் படுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் தி.மு.க'வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய துரைமுருகன் கொரோனா தொற்று, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 85 வயதை கடந்த அவர் ஏற்கனவே 2 டேஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார். எனினும் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது தி.மு.க'வின் தொண்டர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். துரைமுருகனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே துரைமுருகன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.