அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தை அரசியலாக்கும் திருமாவளவன்!

Update: 2021-04-09 11:00 GMT

அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக்கொலை சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கையறித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்தப் படுகொலைகளைக் கண்டித்து ஏப்ரல் 10 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. வி.சி.க இடம்பெற்றுள்ள தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாதவர்கள் தமிழ்நாட்டை சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலைகள்" என அறிக்கை விடுத்துள்ளார்.

கொலைகளுக்கான காரணங்கள் இதுவரை காவல்துறை முறையாக அறிக்கையாக வெளியிடாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் அவற்றிற்கு அரசியல் சாயம் பூசியிருப்பது ஏன் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Similar News