"நடுநிலையா நடந்துக்கோங்க" என்கிற ரீதியில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு கருத்து சொன்ன தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

Update: 2021-04-14 06:30 GMT

"ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் உள்ளது" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றச்சாட்டை விசாரித்த இந்திய தேர்தல் கமிஷன் அவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி அறிவிப்பை கண்டு இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் அதிச்சியில் உறைந்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வரே பிரச்சாரம் செய்ய தடை என்ற முடிவு தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்தது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சாரத்தில் வரைமுறை இல்லாமல் பேசி தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா இரண்டு நாட்கள் வரை தேர்தல் ஆணையத்தால் தடை வழங்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Similar News