எடியூரப்பா அதிரடி அறிவிப்பு : வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்திற்கு ₹1 லட்சம் நிதி!
கொரோனா காலத்தில் பலர் தங்களுடையே பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து மிகவும் தவிக்கின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சாம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவிக்கும் போது "அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தில் கொரோனா நோயால் வயதுமுதிர்ந்த நபர் அல்லது சம்பாதிக்கும் நபர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். இந்த அரசாங்கம் கொரோனா சமயத்தில் தவிக்கும் அனைத்து குடும்பத்திற்கும் துணை நிற்கும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
எடியூரப்பாவின் இந்த அறிவிப்பால் சுமார் 30,000 குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறும். இதனால் அரசாங்கத்திற்கு 250 முதல் 300 கோடி ரூபாய் வரையில் செலவாகும் என்று தெரியவந்துள்ளது.