'அது வந்து இப்ப நா என்ன சொல்றதுன்னா?' - பாட்டிலுக்கு ஏன் 10 ரூபாய் அதிகம் என்றதும் வார்த்தையால் குட்டிக்கரணம் போட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி!

Update: 2023-05-19 05:50 GMT

'அது வந்து நான் இப்ப என்ன சொல்றதுன்னா?' என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தடுமாறிய வீடியோ தான் தற்பொழுது இணையங்களில் வைரல் ஆகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மதுவிலக்கு ஆயத்துறை தேர்வு அமைச்சராக இருந்து வருகிறார், இவரது நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்கப்படுகிறது என்றும் அது எல்லாக் கடையிலும் நடக்கிறது என்றும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது மட்டும் அல்லாமல் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஒரு தனியார் கும்பல் ரவுடிகளுடன் வந்து டாஸ்மாக் பணியாளர்களிடம் வசூலித்து அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கித்தருகிறேன் என பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தடுமாறி உள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தடுமாறிய வீடியோ தான் தற்பொழுது இணையங்கள் வைரல் ஆகிறது, அதில் நிருபர் ஒருவர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூட வச்சு விக்கிறாங்களே என கேட்டதற்கு 'அது வந்து அது வந்து' என செந்தில் பாலாஜி கூறியதும், அதனை தொடர்ந்து கரூர் கம்பெனி பற்றி பேச்சு எடுக்கும் பொழுது செந்தில் பாலாஜி பதில் கூற தயங்கி நின்றதும் வீடியோவாக தற்பொழுது இணையங்களில் வைரல் ஆகிறது.

Similar News