ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25ன் கீழ் தேசிய அளவில் தூய்மை குறியீட்டில் முதல் 10 இடங்களில் தமிழகத்தின் எந்த நகரமும் இடம் பெறவில்லை கோவை 28-வது இடத்திலும் மாநில தலைநகர் சென்னை 38-வது இடத்திலும் உள்ளது. இது குறித்து வருத்தம் தெரிவித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் தூய்மையான சென்னை என்று ஆண்டுதோறும் கூறி வந்தாலும் அதிக பட்ஜெட் ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் மேலும் மேலும் அசுத்தமாகவும் சுகாதாரமற்றதாகவும் மாறி வருகின்றன.
பொது கழிப்பறைகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளால் கறைபட்டுள்ள ஒரு ஆட்சியில் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என விமர்சனம் செய்துள்ளார்