இந்த மாதம் தமிழக பட்ஜெட் - தி.மு.க'வின் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

Update: 2022-03-02 10:45 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் பட்ஜெட் தாக்கல் வருகின்ற 18'ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 5'ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது அதன்பின் சட்டசபை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கடந்த மாதம் 8'ம் தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது, இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்பொழுது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன அனேகமாக வருகின்ற 18'ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு தமிழக அமைச்சரவை கூடி அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கலாம், அதற்காக மார்ச் 5'ம் தேதி தமிழக அமைச்சரவை கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source - Maalai Malar

Similar News