மேற்கு வங்கத்தில் பிரம்மாண்டமாக 1000 இடங்களில் ராம நவமி பேரணி - விஷ்வ ஹிந்து பரிஷத் அதிரடி

Update: 2022-04-06 08:30 GMT

வரும் ராம நவமி அன்று, மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ராமர் சிலைகளுடன் 1,000 யாத்திரைகளை நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) திட்டமிட்டுள்ளது என்று இந்தியா டுடே பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ராம நவமி அன்று மேற்கு வங்காளத்தில் 1,000 இடங்களில் ராமர் சிலைகளுடன் பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் கூடிய யாத்திரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் பெங்கால் மண்டலின் மூத்த செய்தித் தொடர்பாளர் சௌரிஷ் முகர்ஜி இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். கோவிட்-19 சூழ்நிலையின் காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து அற்புதமான முறையில் இந்த திட்டத்தை நடத்த போவதாக அவர் கூறினார்.

மேலும், 'மேற்கு வங்காளத்தில் 1,000 யாத்திரைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ராம நவமி அன்று கொல்கத்தாவில் 20 பேரணிகள் நடத்தப்படும்," என்றார் முகர்ஜி.

வி.எச்.பி'யின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், காவல்துறையின் அனுமதியைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்கள் அந்தந்த பகுதிகளில் திட்டமிடப்பட்ட பேரணிகள் குறித்து உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்துவார்கள்' என்றும். பேரணிகளை நடத்த அனுமதிக்கப்படாவிட்டால் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ன செய்யும் என்ற கேள்விக்கு பதிலளித்த முகர்ஜி, 'ஷோபா யாத்திரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் பொருட்படுத்தாமல் ஏற்பாடு செய்வோம் என்றார். "ஷோபா யாத்திரைக்கு அனுமதி தேவை என்று நாங்கள் நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் காவல்துறைக்கு அறிவிப்போம். அவர்கள் அனுமதிக்காவிட்டாலும், நாங்கள் ராம நவமி அன்று பேரணிகளை நடத்துவோம், "என்று முகர்ஜி கூறினார்.

ராம நவமி பேரணிகளில் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி ஆதரவாளர்கள் பங்கேற்பார்களா என்று கேட்டதற்கு, ராமருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆயுதங்களை அணிவகுத்துச் செல்வது பொதுமக்கள்தான் என்று முகர்ஜி கூறினார். ராம நவமி கொண்டாட்டத்தின் போது வி.எச்.பியின் எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரக்காரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க காவல்துறையை முகர்ஜி கேட்டுக் கொண்டார்.


Source - Opindia.com

Tags:    

Similar News