குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எப்பொழுது? அமைச்சர் துரைமுருகன் கூறிய விறுவிறுப்பான தகவல்

Update: 2022-04-11 10:30 GMT

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் தி.மு.க அரசின் திட்டம் வருகிற 6 மாத காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கியமான சில திட்டங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று திட்ட முக்கியமானது. இந்த திட்டம் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆன நிலையில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நிதி நிலையை காரணம் காட்டி தி.மு.க அரசு இந்தத் திட்டம் அமல்படுத்த காலம் தாழ்த்தி கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் சூலூர் அடுத்த ஜி.என் நகர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. அங்கு கதிர் ஆனந்த் எம்.பி கலந்து கொண்டார், சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.


அப்பொழுது பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, "தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன, அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற ஒரு மாத காலத்திற்குள் வள்ளிமலையில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பேசினார்.



Source - Maalai Malar

Tags:    

Similar News