2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டில் எந்த கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்ற முனைப்பில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக போட்டிகளை எதிர்கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன.
மற்றொரு பக்கம் இண்டியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாஜகவால் தமிழகத்தில் வர முடியாது. அவர்களால் இங்கு கால் பதிக்கவே முடியாது என்றெல்லாம் எதிர் தரப்பில் இருந்து பலமான கருத்துக்கள் எழுந்து வந்தது.
"கடந்த காலங்களில் பாஜகவை ஒரு ஓட்டு கட்சி, நோட்டா கட்சி என்றாலும் முத்திரை குத்தி வந்தார்கள். ஆனால் தற்போது வரலாற்றில் முதல் முறையாக எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லாமல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டாவது இடத்தை கைப்பற்றி இருக்கிறது என்றால் சும்மாவா? இது வளர்ச்சி இல்லையா?" என்று தமிழக பாஜக தரவு மற்றும் மேலாண்மை பிரிவு செயலாளர் பிரதீப் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News