தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஐ.டி. பிரிவு சார்பில் அறப்போராட்டம்!

தமிழகம் முழுவதும் திமுக அரசின் அத்து மீறலை கண்டிக்கும் விதமாக பாஜக ஐடி பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Update: 2021-12-12 09:30 GMT

தமிழகம் முழுவதும் திமுக அரசை  கண்டிக்கும் விதமாக பாஜக ஐடி பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.


இது தொடர்பாக தமிழக பாஜக சமூக ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மௌன அறப்போராட்டத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை மறுக்கும் காவல்துறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி மௌன அறப்போராட்டம் நடைபெற்றது.

பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்திற்கு, தமிழக பாஜக மூத்த மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில், சமூக ஊடகத்தில் உண்மையான துணிச்சலுடன் எடுத்துரைக்கும் பாஜக நிர்வாகிகளையும், பாஜக ஆதரவாளர்களையும் எந்த முகாந்திரமுமின்றி ஒருதலைப்பட்சமாக கைது செய்யும் காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி மொன அறப்போராட்டம் நடைபெற்றது.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் திரு.நிர்மல் குமார் அவர்களுடன் ஊடகப் பிரிவின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தின் பாஜக அலுவலகத்திலும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மௌன அறப்போராட்டம் நடத்தப்பட்டது.


இந்தப் போராட்டத்தின் இறுதியில், செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பாஜக மாநிலத் தலைவர் நிர்மல்குமார் அவர்கள் பேசுகையில், இப்போது நடைபெற்றது முதல் கட்ட போராட்டம் மட்டுமே. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதுபோல் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடரும் பட்சத்தில், பாஜ ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனையில் வலைப்பதிவு செய்பவர்களையும் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News