வரலாற்று சிறப்புமிக்க கங்கா விரைவுச்சாலை - கோலாகலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் !

Update: 2021-12-17 00:30 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.


மத்திய அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் நாளை மறுநாள் (18'ம் தேதி, டிசம்பர்) உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த விரைவுச்சாலை பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அடுத்தபடியாக திறப்புவிழாவை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விரைவுச்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் ஏதுவான வகையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Source - Maalai Malar

Similar News