அதிக ஃபலோயர்கள் கொண்ட கணக்குகளை வாங்கியதில் முறைகேடா? பி.டி.ஆர் பதவி பறிப்பா? பின்னணி என்ன?

Update: 2022-01-11 11:15 GMT

அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக வலைதள கணக்குகளை அதிக விலை கொடுத்து வாங்கியதில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கணக்குகளை சரிவர பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க'வின் ஐடி விங் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



கடந்த 2017'ம் ஆண்டு தி.மு.க ஐடி விங்க் துவங்கப்பட்டது. கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தி.மு.க ஐடி விங்க எனப்படும் தகவல் தொழில்நுட்ப அணியும் ஒரு காரணமே என தி.மு.க தலைமையால் நம்பப்பட்டு வந்த நிலையில் அதன் மாநில செயலாளராக பதவி வகித்து வரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதவி பறிக்கப்பட்டுளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்கு காரணமாக மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது, ஒன்று தி.மு.க ஐடி விங்க்'கில் மாவட்டம் தோறும் எந்தெந்த பதவிகளில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் பி.டி.ஆருக்கே தெரியாது எனவும், தி.மு.க சித்தாந்த கணக்குகளை பரப்பவும், தி.மு.க'வை பற்றி ஆஹா, ஓஹோ என புகழ் பாடவும் அதிக ஃபாலோயர்கள் எனப்படும் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் கணக்குகளை அதிக விலை கொடுத்து வாங்கியதில் சரியான கணக்குகள் இல்லை எனவும், அமைச்சர் பதவி வந்த பிறகு தி.மு.க ஐடி விங்க் என ஒன்று இருக்கிறதா என கேட்கும் அளவிற்கு அதனை கண்டுகொள்ளாமல் விட்டதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மெத்த படித்தவர் என புகழ்பாடி அவரை கட்சி பதவியிலும், அமைச்சர் பதவியிலும் வைத்ததற்கு உருப்படியாக கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் செயல்படுத்த வில்லை என தலைமையின் அதிருப்தியே இதற்கு காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டத்தினர். இது இப்படியே நீடித்தால் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி போல் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என தெரிகிறது.


Source - Junior Vikatan

Similar News