"டாஸ்மாக்'கை மூடலாம், ஆனா மத்த மாநிலத்துலேர்ந்து மதுபானங்கள் வந்திடும் " - அமைச்சர் செந்தில்பாலாஜியின் சமாளிப்பு பதில்

Update: 2022-01-26 10:45 GMT

டாஸ்மாக் கடையை மூடினால் மற்ற மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்கள் உள்ளே வந்துவிடும் என்பதற்காக டாஸ்மாக் கடையை மூடவில்லை என்பது போன்ற தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "கொரோனா இரண்டாம் அலையின் போது கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் கடைகள் ஏதும் மூடப்படவில்லை அதனால் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டுவருதல் போன்ற பல குற்ற சம்பவங்கள் நடக்கும் சூழல் உருவானது. தற்பொழுது டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து மருத்துவ குழுவின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்' என சமாளிக்கும் விதமாக தெரிவித்தார்.


டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கும் நிலையில் தி.மு.க அரசு அதனை கருத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதும் குறிப்பிடதக்கது.


Source - Asianet NEWS

Similar News