குடியரசு தின வாழ்த்து செய்தியில் தி.மு.க'வுக்கு எச்சரிக்கை விடுத்த ஆளுநர் - இனி நடப்பது?

Update: 2022-01-26 10:45 GMT

'அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் கவலையளிப்பதாக' 73'வது குடியரசு தினவிழா உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தவது குறித்த எச்சரிக்கையை தி.மு.க அரசுக்கு விடுப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி முதன் முறையாக இன்று 73'வது குடியரசு தினத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கொடி ஏற்றினார்.

பின்னர் நாட்டு மக்களுக்கு விடுத்த 73'வது குடியரசு தின வாழ்த்து செய்தியில் அவர் கூறியதாவது, 'தமிழகத்திலிருந்து ஏராளமானோர் நாட்டிற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறு நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளையும், வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை கௌரவிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், ' அரசுப்பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாடு கவலையளிப்பதாக குறிப்பிட்ட அவர் அரசுப்பள்ளிகள் மட்டுமே ஏழைகளுக்கான நம்பிக்கை என குறிப்பிட்டார். மேலும் அரசுப்பள்ளிகள் தரத்தை மேம்படுத்துவது நம்முடைய அவசரத்தேவை' என ஆளுநர் கூறினார்.

தேசியக்  கல்விக்கொள்கை அமல்படுத்தவதில் அலட்சியம் காட்டும் தி.மு.க அரசுக்கு இது மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Source - Asianet NEWS

Similar News