"வேலை செஞ்ச நான் என்ன இளிச்சவாயனா?" கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட்டு ஒதுக்கியதால் கடுப்பான தி.மு.க பிரமுகர்

Update: 2022-02-02 12:00 GMT

தென்காசி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வார்டு ஒதுக்கியதால் கோபம் அடைந்த தி.மு.க உறுப்பினர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க தனது ஒன்பது கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வருகிறது, இந்நிலையில் பல இடங்களில் தி.மு.க'வினர் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி தி.மு.க தலைமை கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கி வருவதால் சில இடங்களில் தி.மு.க'வினர் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் எட்டாவது வார்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு எட்டாவது வார்டு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் கடந்த தீபாவளி பண்டிகையின் போது வீடுவீடாக இனிப்புகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் தொடங்கியிருந்தார் தி.மு.க பிரமுகர் சரவணகுமார். மேலும் மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவும் தன்னை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் தேர்தல் வேலைகளை செய்தார்.


இந்நிலையில் 8வது வார்டு கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. தி.மு.க இதனால் கலக்கம் அடைந்த தி.மு.க பிரமுகர் சரவணகுமார் தி.மு.க'வின் மீது கடும் விரக்தியில் சரவணகுமார் அங்கு சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கூட்டணிக் கட்சிக்கு வேலை செய்யாமல் தி.மு.க பிரமுகர் வெளியேறிய விவகாரம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Source - One india tamil

Similar News