ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து விமர்சித்த பா.ஜ.க. பிரமுகர் கைது: முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என அண்ணாமலை சவால்!

Update: 2022-03-29 08:47 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டதை விமர்சனம் செய்த பாஜக சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத் என்ற நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திமுக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், திமுகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்த 6 மணி நேரம் நான் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறியுள்ளார்.

Full View

சமீபகாலமாக திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளை கைது செய்து வருகிறது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர். தற்போது துபாய் பயணம் மேற்கொண்டதை விமர்சனம் செய்த பாஜக நிர்வாகி கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியை விமர்சனம் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Vikatan

Image Courtesy: Hindu Tamil

Tags:    

Similar News