உலக சிறந்த ஸ்டார்ட் அப் நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடம் நோக்கி இந்தியா - பியூஸ் கோயல்
"இந்தியா உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நாடாக மாற விரும்புகிறது" மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் 'வளர்ச்சிக்கான நுழைவாயில் - வட்டமேசையில் இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் உரையாற்றிய கோயல் கூறியதாவது, "இன்று நாங்கள் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்கிறோம், ஆனால் உலகின் நம்பர் ஒன் ஸ்டார்ட்அப் இலக்காக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இந்தியாவின் விருப்பம்' என்றார் அவர்.
இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அஹ்மத் பெல்ஹவுல் அல் ஃபலாசி, சர்வதேச வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி செயோதி, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறையின் தலைவர் முகமது அல் ஷரஃப் ஆகியோர் தலைமை தாங்கினர் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கோயல் கூறியதாவது, "இந்தியா ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு சிறப்பான 'ஜுகல்பந்தி' அல்லது முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இடையேயான கலவையுடன் சமநிலை முடிவைப் பெறுவதற்கும், அனைவருக்கும் வெற்றி-வெற்றி தீர்வை அடைவதற்கும் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை வழங்குகிறது. துபாய் எக்ஸ்போவில் இருந்து மிகப்பெரிய வரவேற்பை நான் கண்டேன், அங்கு எங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு நிதி திரட்டவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் மற்றும் முதலீடுகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான இந்தியாவின் வலுவான நட்புறவை வலுப்படுத்த உதவும்' என்றார் கோயல்.
"எக்ஸ்போ2020 துபாயில் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய 700 ஸ்டார்ட்அப்கள் அனைத்தும் எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகள் மற்றும் யோசனைகளால் செழுமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த இந்த முயற்சி, வணிகங்களின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,
ஸ்டார்ட்அப்கள் பரிசோதனை செய்து, தோல்வியடைந்து, தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். "ஸ்டார்ட்அப் உலகில் உள்ள உங்கள் அனைவரையும் தொலைதூர இடங்கள், கிராமங்கள், சிறு நகரங்கள், வடகிழக்கு இந்தியா மற்றும் பிற பகுதிகளுக்கு ஸ்டார்ட்அப் கதையை எடுத்துச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோயல் மேலும் கூறினார்.