இடும்பன் - கங்கா மஹா ஆரத்தி உற்சவம் நிகழ்ச்சிக்கு சென்ற ஹெச்.ராஜாவை கைது செய்த தி.மு.க. அரசு!
திண்டுக்கல் மாவட்டம், பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ள இடும்பன் கங்கா மஹா ஆரத்தி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா செல்ல விடாமல் தி.மு.க. அரசு கைது செய்துள்ளது.
தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன்.
— H Raja (@HRajaBJP) May 18, 2022
(சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்.பி. எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் தான் மகா ஆரத்தி சங்கம் நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்த தி.மு.க. அரசை கண்டித்து ஹெச்.ராஜா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Facebook
Image Courtesy: The New Indian Express