'நேத்து ஜோதிமணி, இன்று சின்ராஜ்' ஆனா தி.மு.க கூட கூட்டணி வச்ச நீங்க ரொம்ப பாவம் - போட்டுத்தாக்கும் அண்ணாமலை

Update: 2022-07-12 07:28 GMT

சுயமரியாதை இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க., ஏன் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட எம்.பி.,யாக இருப்பவர் சின்ராஜ். இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் சின்ராஜிக்கு எவ்வித தகவலையும் மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தி.மு.க., கூட்டணி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி அவர்கள் தி.மு.க., அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி., திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் இந்த அறிவாலய அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News