"நல்ல நேரம் பார்க்காமல்தான் பதவி ஏத்துக்கிட்டிங்களா?" - செந்தில்குமாருக்கு கார்த்திக் சிதம்பரம் பதிலடி!
இரண்டு நாட்களுக்கு முன்பு, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ஏற்பாடு செய்யப்பட்ட இந்து பூஜை முறைகளை அவமதித்து, "இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏன் நிகழ்ச்சியில் அழைக்கவில்லை?" என்று அதிகாரிகளிடம் தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் ஆவேசமடைந்து பேசிய வீடியோ, சமூக வலைதளம் மற்றும் அரசியல் வெளியில் பேசுபொருளாகியுள்ளது.
"இது திராவிட மாடல் ஆட்சி ஏன் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை? என்று கூறும் எம்.பி செந்தில்குமார், அதே போன்று தமிழக அரசு இந்து கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பது ஏன்?மற்றும் சர்ச் மற்றும் மசூதிகளையும் திராவிட மாடல் அரசு கட்டுப்படுத்தாமல் போனது ஏன்?" என்று சரமாரியாக எம்.பி செந்தில்குமாரை நோக்கி இனையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், எம் பி செந்தில்குமாருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் "முற்றிலும் தேவையற்ற கொந்தளிப்பு இது. சுபமான நேரங்களை மதிக்காமல் உங்கள் கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளதா? என்று நீங்களே சொல்லுங்கள். மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுத்துவிடலாம் என்று திராவிட சிந்தனையாளர்கள் தவறாக நினைக்கின்றனர்.
கார்த்திக் சிதம்பரத்தின் கருத்து, சமூக வலைத்தளத்தில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.