ஸ்டாலினின் புதிய கணக்கு 14000 கோடியில் 5000 கோடி போக மீதம் 7000 கோடி - விழுப்புரத்தில் தலையில் அடித்துகொண்ட தி.மு.கவினர்!
தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் கணக்கு சம்மந்தமான பிரச்சாரங்கள் பிரசித்தி பெற்றவை! ஆளும் கட்சியை கேள்வி கேட்டு குடைகிறேன் என்ற பெயரில் பேச துவங்குவார் ஆனால் முடிவில் கணக்கை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதாவது உளறி வைப்பார். அதுவும் இது தேர்தல் நேரம் என்பதால் ஸ்டாலின் அவர்களின் சறுக்கல்களை பட்டியலிட்டால் அந்த புத்தகம் 100 பக்கங்களை கடந்துவிடும்.
அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆளும் கட்சியான அ.தி.மு.க'வையும், முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். அப்பொழுது அங்கு குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்.
அடுத்த சமயமே தடாரென ஸ்டாலின் பேச்சு சறுக்கியது தி.மு.க'வினருக்கே புரை ஏறியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாக்குறுதியை விமர்சிக்கும் விதமாக "14000 கோடி ரூபாய் கடன் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார், ஆனால் 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் மிச்சம் 7000 கோடி யாரு உங்கப்பனா குடுப்பான்" என ஆவேசமாக கேட்டார்.
ஆனால் 14000 கோடியில் 5000 கோடி போக மீதம் 7000 கோடி என்ற தி.மு.க தலைவரின் அபார கணக்கு வழக்கை கண்டு "ஏற்கனவே வெயில் இதுல இவர் வேற" என அங்கிருந்த உடன்பிறப்புகளே புலம்பியது அனைவரின் காதிலும் விழுந்தது.
ஒரு சிறிய கணக்கு கூட தெரியாமல் பல இடங்களில் சறுக்கும் ஸ்டாலினை நம்பி ஆட்சியை எப்படி ஒப்படைப்பது என மக்கள் இப்பொழுதே பேசி வருகின்றனர்.