"உங்களது வெற்றி இந்தியாவின் வெற்றி!" - அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி!

Update: 2022-07-29 05:51 GMT

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42'வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


முதலிடம் பிடித்த 69 மாணவ மாணவிகளுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிய பின் பிரதமர் பேசுகையில் : வணக்கம்(தமிழில்) அனைவரையும் வரவேற்கிறேன். இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அப்துல் கலாமின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊட்டம் அளிப்பவை. கொரோனா  தொற்று நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் சோதனையாக அமைந்தது. மருத்துவர்கள் விஞ்ஞானிகள் உட்பட அனைவரின் முயற்சியால் நாம் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டோம்.


கடந்த ஆண்டில் இந்திய நாட்டிற்கு அன்னிய நேரடி முதலீடு 83 மில்லியன் கோடி. உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா உலக அரங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பட்ட மக்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா உலக அரங்கில் முன்னிலையில் உள்ளது.


புதிய கல்வி கொள்கை மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப, முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது. உங்களது வெற்றி இந்தியாவின் வெற்றியாகும். 


மாத ஊதியத்திற்கு வேலைக்கு செல்லாமல் இளைஞர்கள் தனியாக தொழில் தொடங்கி வருகின்றனர். முன்பெல்லாம் இளைஞர்களிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்? என்று கேட்பார்கள். ஆனால் தற்போது நீங்கள் எந்த தொழில் தொடங்கியுள்ளீர்கள்? என்று கேட்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

என்று இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பிரதமர் பேசினார்.

Similar News