அரசு மாணவர் விடுதியில் சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம்:சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்த 3 நாட்களுக்குள்ளேயே இப்படியா

Update: 2025-07-09 15:48 GMT

மதுரை  உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது 

இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது திமுக ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது எனவே இனியும் எத்தனை பெயர்சூட்டு விழாக்கள் நடத்தினாலும் மேடைகளில் முழங்கினாலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசை இன்னும் சில மாதங்களில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கியெறிவர் என்பது திண்ணம் என கண்டனம் தெரிவித்துள்ளனர் 

Tags:    

Similar News