"ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் 200ரூபாய் இணைய கூலி போல் செயல்படாதீர்கள்" - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சாடிய அண்ணாமலை!

Update: 2021-04-29 03:45 GMT

இணையம் இன்று சாமானிய திறமையான கட்சி தொண்டர்களை கட்சி தலைமை கண்டறியவும், கட்சி தலைவர்களின் தரத்தை அனைத்து தொண்டர்களும் ஒருநொடியில் அறியவும் உதவும் ஒரு தளமாகிவிட்டது. இந்த தளத்தில் இதுவரை பிம்பமாக்கப்பட்ட பலரின் உண்மைமுகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றுமில்லை என உதாசீனப்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் மதிக்க தகுந்தவையாக மாறின இப்படி பல மாற்றங்களை இணையம் எனும் தளம் சாத்தியயமாக்கியுள்ளது. இது குறிப்பாக தமிழக அரசியலில் அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

அந்த வகையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் இணைய கூலிகள் போல் போலியாக உருவாக்கப்பட்ட படங்களை இணையத்தில் உலவவிட்டு தற்பொழுது அவரே இளைய படித்த சமுதயம் முன் கோமாளியாக தோலுரிந்து நிற்கிறார்.

இன்றைய சூழலில் கொரோனோ பேரிடர் காலத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளும் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என அல்லபடும் நேரத்தில் அதனை வைத்து எவ்வாறு ஆளும் அரசின் மீது குறை சுமத்தலாம் அதனை தன் அரசியல் லாபத்திற்காக எவ்வாறு மடைமாற்றலாம் என எதிர்கட்சிகள் முயன்று வருகின்றன. இதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த சில தினங்களாக போலியாக உருவாக்கப்பட்ட படங்களை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு "பார்த்தீர்களா பா.ஜ.க அரசின் முகத்தை" என்ற விதமாக போலியாக பரப்ப தான் ஓரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதை மறந்து முயற்சித்தார்.

இதனை பா.ஜ.க'வின் துணைத்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிரக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு "ஒரு தேசிய

கட்சியின் மாநில தலைவர் போல் நடந்து கொள்ளுங்கள், மாறாக 200 ரூபாய் இணைய கூலிகளை போல் உங்களை தாழ்த்திகொண்டு இப்படி பதிவேற்றுவது வேடிக்கையான மனிதராக உங்களை காட்டுகிறது" என தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், வயதில் மூத்தவர் கே.எஸ்.அழகிரி இதனை புரிந்துகொண்டால் சரி.

Similar News