மாணவர்கள் போராட்டத்திற்கு பயந்து 200 காவலர்களுடன் மெரினா'வை பாதுகாக்கும் தி.மு.க அரசு !
200'க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தி மெரினாவில் மாணவர்கள் போராடாத அளவிற்கு பாதுகாத்து வருகிறது தி.மு.க அரசு.
ஆன்லைனிலேயே தொடர்ந்து தேர்வுகளை நடத்தக்கோரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர், ஆனால் இனி ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறாது என்றும், நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் பரவியது. எங்கே ஜல்லிக்கட்டு போல் போராட்டம் துவங்கிவிடுமோ என பயந்து நிற்கும் தி.மு.க அரசு மாணவர்கள் கூடிவிடக்கூடாது என்பதற்காக 200'க்கும் மேற்பட்ட போலீசாரை வைத்து மெரினாவை கண் போல காத்து வருகிறது.
நேற்று முதல் அங்கு சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர் போலீசார், இன்றும் 2'வது நாளாகவும் மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அண்ணாசதுக்கம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.