இந்த அரசு மக்களுக்கு என்ன பண்ணுது.. 2015 காட்டிலும் ரொம்ப மோசம்.. புலம்பும் சென்னை மக்கள்..

Update: 2023-12-06 09:55 GMT

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியது. பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் பெரும்பாலான இடங்களுக்கு மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. காலை முதல் சென்னையில் பிரதான பகுதிகள் மின்சாரம் இன்றி இருண்டுள்ளது.


குறிப்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னை புயல் காரணமாக பாஜக சார்பில் அனைத்து உதவிகளையும் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களால் முடிந்த உதவிகளை வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு செய்து வருகிறார்கள். பல்வேறு நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள்.



இந்நிலையில் பாலிமர் நியூஸ் சேனலுக்கு சென்னைவாசி ஒருவர் பேட்டி கொடுக்கும் பொழுது, "இந்த அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? 2015 ஆம் ஆண்டு காட்டிலும் தற்பொழுது நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். அரசு எங்களுக்கு எந்த உதவியும் தற்போது வரை செய்யவில்லை. களத்தில் இறங்கி வேலை செய்ய மாட்டிக்கிறாங்க, ஒரு போர்டு கூட விட மாட்டாங்க, உணவு உதவிகளை கூட செய்ய மாட்டாங்க என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை அரசின் மீது எடுத்து வைத்து இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News