பிரதமரால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம்! ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!
2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் தொடங்கபட்டு செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது! ஆனால் இதற்கு திமுக புதிய பெயரை இட்டு மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாடி உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குழுக்களுக்கு மேல் குழுக்கள் மட்டுமே அமைத்து தற்போது மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி செயல்படுத்தும் திமுக அரசின் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்டறிவதற்கும் நீங்கள் நலமா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் மக்கள் யாரும் நலமாக இல்லை என்பதை தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டிய நிலையில் தான் தமிழக முதல்வர் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதோடு திமுக வைத்திருக்கும் மக்களை தேடி மருத்துவம் என்றால் திட்டமானது கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்பட தொடங்கிய மக்கள் தொகை அடிப்படையிலான தொற்றா நோய்கள் பரிசோதனை திட்டமாகும் இதற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது.
அதுமட்டுமின்றி மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கும், முதல்வரின் முகவரி திட்டத்திற்கும், நீங்கள் நலமா என்ற திட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற குழப்பத்தில் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai