திமுக கூட்டணி எம்.பிக்களை துரத்தும் மக்கள்! 2024 மொத்தமும் போச்சா? மாறிய தமிழ்நாடு....
திமுக எம்பிக்களை தொடர்ந்து ஓடவிடும் மக்கள்...! எம்.பிக்கள் அலறியடித்து ஓடும் அவலம்...!
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் தமிழகத்தில் வெற்றி பெற்றது, 38 தொகுதிகளில் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததன் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற 38 தொகுதி எம்பிக்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் கடந்த முறை தேர்தலை சந்திக்கும் பொழுது ஏகப்பட்ட வாக்குறுதிகளை அந்த சமயத்தில் திமுக எம்பி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் அள்ளி தெளித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக 38 தொகுதிகளிலும் மக்கள் கொதிப்பில் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நிலையில் தொடர்ச்சியாக திமுக எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்டு துரத்தப்படுவதும், செய்தியாளர்கள் தொடுக்கும் கேள்விக்கும் பதில் கூறாமல் தொகுதியில் இருந்து வெளியேறுவதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திருச்சி மாவட்டம் 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதிக்கு நான்கு வருடத்திற்கு பிறகு வருகை தந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டனர், மக்களுக்கு தேவைகளை கூட கேட்டு நிறைவேற்ற முடியாமல் ஓட்டு கேட்க மட்டும் வருகிறீர்களே எனக்கூறி இஸ்லாமிய மக்கள் திருநாவுக்கரசர் மீது கேள்வி எழுப்புகையில் என்ன பதில் கூறுவென்று தெரியாமல் திகைத்து நின்றார் திமுக எம்பி திருநாவுக்கரசர்.
மேலும் மக்கள் எம்பியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி தரையில் அமர்ந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை திருநாவுக்கரசர் சமாதானப்படுத்தி கெஞ்ச வேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டது. இது ஒரு சம்பவம்!
அடுத்தபடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெற்றது அப்போது கிராம சபை கரூர் அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்திற்கு கரூர் எம்பி ஜோதிமணி சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார்.