ஜூலை 23இல் ஆ.ராசா சொத்துக்கு குவிப்பு வழக்கு குற்றச்சாட்டு பதிவு!சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

Update: 2025-06-17 16:05 GMT

திமுக எம்பி ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள் மீது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

நீலகிரி நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது இந்த வழக்கு மீதான விசாரணை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நடந்து பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது அதில் வருமானத்தை விட 5 கோடியே 53 லட்ச ரூபாய்க்கு அதிகமாக செத்து குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது 

பின்பு இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது இந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி இந்த வழக்கு மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் 

Tags:    

Similar News