மாநகராட்சி கவுன்சிலர் சீட்டு 25 லட்ச ரூபாய்! வியாபாரத்தை துவக்கிய தி.மு.க!

Update: 2022-01-28 12:30 GMT

மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் சீட்டுக்கு குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தி.மு.க நிர்வாகிகள் புலம்புகின்றனர்.


சமீபத்தில் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தேதிகளை அறிவித்தது தேர்தலை அறிவித்ததில் இருந்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது வேட்பு மனு தாக்கல் செய்வது என்ற வேலைகளில் பரபரப்பாக உள்ளனர், ஆனால் தி.மு.க'வில் மட்டும் இவ்வளவு தொகை பேசலாம் என பரபரப்பாகி உள்ளனர்.


மதுரை நகர் வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களில் கவுன்சிலர் சீட்டுக்கு ஏக டிமாண்ட் இருப்பதால் பேரம் நடக்கிறது குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்தில் 25 லட்சம் முதல் மற்றொரு மாவட்டத்தில் 30 லட்சம் வரை கவுன்சிலர் சீட்டுக்கு தி.மு.க'வினர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பணபலம் உள்ள ஒருவருக்கு சீட்டு உறுதி என்கின்றனர், கட்சி நிர்வாகிகளும், கட்சியாக உழைத்தவர்களுக்கு ஒன்றுமில்லை என்ற நிலையே நிலவுகிறது.


இதனால் பல சீனியர் நிர்வாகிகள் மனமுடைந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Source - Dinamalar

Similar News