உறுப்பினர் சேர்க்கையில் திணறும் காங்கிரஸ் - 25 சதவிகிதம் இலக்கை கூட முடிக்க திணறும் மாநில அளவிலான நிர்வாகிகள்

Update: 2022-04-01 13:00 GMT

இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை வேகமெடுக்காத காரணத்தினாலும், பழைய உறுப்பினர்கள் அதிகம் ஈடுபாட்டுடன் செயல்படாத காரணத்தினாலும் காங்கிரஸ் கட்சி தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை 15 நாட்கள் கட்சி நீடித்துள்ளது என்று தெரிகிறது.




நவம்பர் 1, 2021 அன்று தொடங்கிய காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, மாநில அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை சரிவர சேர்க்கப்படாத காரணத்தால் இலக்கை எட்டமுடியவில்லை, இதனால் உறுப்பினர் சேர்க்கையை அடுத்து 15 நாட்களுக்கு நீடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது கட்சி தலைமை. அந்த அறிக்கையின்படி, உறுப்பினர் சேர்க்கை இயக்கமானது ஏப்ரல் 15, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் பல பொதுச் செயலாளர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் இந்த செயல்முறையை முடிக்க கூடுதல் அவகாசம் கோரியதையடுத்து, இந்த இயக்கத்தை நீட்டிக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் முக்கியத்துவமாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது, காங்கிரஸுக்கு டிஜிட்டல் முறையில் புதிதாக சேரும் உறுப்பினர்களை பதிவு செய்வதால் கட்சி வழக்கமாக எதிர்கொள்ளும் தேர்தல் சவால்களை புது உறுப்பினர்கள் சேர்க்கையால் சமாளிக்க உதவும் என பெரிதும் நம்புகிறது.

பல மாநிலங்களில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் இலக்கை அடையாததால் உறுப்பினர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களில் எழுந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருப்பதால் கால அவகாசத்தை நீடிக்க கோரிய மாநிலங்களில் கேரள மாநிலமும் ஒன்று. உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக ஆதாரங்களின்படி, நவம்பர் முதல் 39 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து தெலுங்கானா சிறப்பாகச் செயல்பட்டது, டெல்லி 2.5 உறுப்பினர்களைச் சேர்த்தது ஆனால் காங்கிரசுக்கு டெல்லி இலக்கு 10 லட்சம் ஆகும் அதில் 25% மட்டுமே காங்கிரசால் செயல்படுத்த முடிந்தது.

அஸ்ஸாம் காங்கிரஸ் தங்கள் இலக்கை 33 லட்சமாக நிர்ணயித்திருந்தாலும், அவர்களால் அவர்களின் இலக்கில் 50% மட்டுமே அடைய முடிந்தது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அசாமில் காங்கிரஸால் முந்தைய உறுப்பினர் எண்ணிக்கையான 24 லட்சத்தை கூட எட்ட முடியாமல் போகலாம் என்று ஊடகங்களால் மேற்கோள் காட்டப்படும் காங்கிரஸின் அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கூறுகின்றனர்.

அஸ்ஸாம் பிசிசி தலைவர் பூபென் போராவை தொடர்பு கொண்டபோது, ​​உண்மையில் உறுப்பினர் சேர்க்கையில் பற்றாக்குறை இருப்பதாக ஒப்புக்கொண்டார். 2021 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பல பழைய உறுப்பினர்கள் (இன்னும் உறுப்பினர்களாக உள்ளவர்கள்) செயலற்ற நிலையில் உள்ளனர், மேலும் அதிகமான புதியவர்கள் காங்கிரஸில் சேர விரும்பவில்லை, எனவே இலக்கை அடைவது கடினமாக இருக்கலாம் அவர் கூறினார்..

இந்த எண்கள் காங்கிரஸ் ஆதாரங்களால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்பதால், இந்த எண்களின் நம்பகத்தன்மையை முழுமையாக நம்ப முடியாது.



Source - Opindia.com

Tags:    

Similar News