தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதித்த மாவட்டமாக கோயம்பத்தூர் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் 25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் போது "கோவை மாவட்ட கழக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோவிட்- 19 நோயாளிகளுக்கு பயன்படக்கூடிய 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினோம்.
#கோவை மாவட்ட கழக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து #COVID19 நோயாளிகளுக்கு பயன்படக்கூடிய 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினோம்.(1/3) @ADMK_Kovai pic.twitter.com/pdVAiuvnm5
— SP Velumani (@SPVelumanicbe) June 8, 2021
மேலும் கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதிக்காமல் உடனடியாக வழங்கவேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் & அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களின் மக்கள் நல பணிகளுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கழகத்தினர் மீது பொய் வழக்குகள் பதியாவண்ணம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தோம்." என்று அவர் தெரிவித்தார்.