ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஆட்சி அமைக்கப் போகும் பாஜக...26 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக..!

Update: 2024-06-04 16:56 GMT

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணி 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து ஆட்சியை பிடித்துள்ளது.. 

135 தொகுதிகளில் தெலுங்கு தேசமும், 21 தொகுதிகளில் ஜனசேனாவும், 8 தொகுதிகளில் பாஜகவும் வெற்றியை உறுதி செய்துள்ளது. அதோடு ஆந்திராவின் ஆளும் அரசாக இருந்த ஒய்.எம்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 

இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்பதாம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களை வென்று பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்தார். இருப்பினும் 26 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் கோட்டையை தகர்த்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 

Source : The Hindu Tamil thisai 


Tags:    

Similar News