தமிழகத்தில் மலரும் தாமரை: கரூர் பழைய ஜெயங்கொண்டம் 3-வது வார்டு பா.ஜ.க வேட்பாளர் வெற்றி!

Update: 2022-02-22 05:10 GMT

கரூர்: ஜெயங்கொண்டம் 3-வது வார்டில், பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஆளும் கட்சியான தி.மு.க தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி முன்னிலை வகித்தாலும்,


பல முக்கியமான பல நகராட்சி மற்றும்  மாநகராட்சி வார்டுகளில், பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது. பாஜக வெற்றி பெற்ற வார்டுகளில் தி.மு.க'விற்கு பலத்த அடி விழுந்துள்ளது.


இதன் வரிசையில்,  கரூரில் பழைய ஜெயங்கொண்டம் 3-வது வார்டு பா.ஜ.க வேட்பாளர், கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு முக்கிய தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சி வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.


கரூரில் 3'வது வார்டை வென்ற பா.ஜ.க, தமிழகக் கொங்குப் பகுதியில், தன் வேர்களை ஆழமாக ஊன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

Similar News