தமிழகத்தில் 3வது பெரிய கட்சி பா.ஜ.க.தான்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

Update: 2022-02-25 04:59 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் வெளியானது. இதில் முதல் இடத்தில் திமுகவும், அதற்கு அடுத்த இரண்டாம் இடத்தில் அதிமுகவும், மூன்றாவது இடத்தில் பாஜகவும் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானது. ஆளும் கட்சிக்கு சாதகமாக முடிவுகள் பல இடங்களில் அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. இதனால் மாநகராட்சியில் 43.59, நகராட்சி 43.49, பேரூராட்சி 41.91 சதவீத இடத்தை திமுக பிடித்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அதிமுக உள்ளது. மாநகராட்சியில் 24, நகராட்சியில் 26.86, பேரூராட்சியில் 25.56 சதவீதமாக உள்ளது.

Full View

அதற்கு அடுத்து மூன்றாவது கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. அதன்படி மாநகராட்சியில் 7.17, நகராட்சியில் 3.31, பேரூராட்சியில் 4.30 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. எனவே 4வது இடத்தைதான் காங்கிரஸ் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தை நாம் தமிழர் கட்சியும், 6வது இடத்திற்கு மக்கள் நீதி மய்யம், 7வது இடத்தில் பாமகவும் உள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:The Week

Tags:    

Similar News