பா.ஜ.க-வில் இணைந்த இரு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்! காத்திருக்கும் பிறகட்சியை சேர்ந்த மாஜி 30 பேர்? கழகங்கள் 'ஷாக்'!

Update: 2021-11-24 13:00 GMT

இன்று தமிழக பா.ஜ.க'வில் பிற கட்சிகளில் இருந்து 6 முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர், அதில் இருவர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் ஆவர்.


தமிழக பா.ஜ.க அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் போதிய அளவு அங்கீகாரம் கிடைக்காமல் அரசியல் சூழ்ச்சியால் புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி பா.ஜ.க மட்டுமே என மக்களே கூறும் அளவிற்கு தமிழக பா.ஜ.க'வின் செயல்பாடுகள் களத்திலும், மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளன. பிற கட்சிகளில் இருந்தும் கூட பா.ஜ.க'விற்கு அதிகளவில் நிர்வாகிகளும், மாஜி எம்.எல்.ஏ'க்களும் தங்களை கட்சியில் இணைத்துகொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கட்சியில் இன்று இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ'க்கள் உட்பட ஆறு பேர் இணைந்துள்ளனர். இன்று பா.ஜ.க வில் இணைந்த பிறகட்சி பிரபல மாஜி எம்.எல்.ஏ'க்கள் மற்றும் நிர்வாகிகள் ..

1) சிவகங்கை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ சோழன் பழனிசாமி,

2) சோழவந்தான் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கம்,

3) தமிழ்நாடு சிவசேனா கட்சி மாநில தலைவர் இராஜசேகரன்,

4) தமிழ் நாடு இளைஞர் கட்சி நிறுவனர் டாக்டர் இராஜசேகரன்

5) கடலூர் அ.ம.மு.க மாவட்டம் செயலாளர் பாலமுருகன்

6) பா.ம.க கட்சி மாநில துணை பொது செயலாளர் பி. ஆர்.துரைபாண்டியன்

ஆகிய 6 முக்கிய பிறகட்சி பலம்வாய்ந்த நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க'வில் இணைந்தனர். மேலும் கதிர் செய்திகளுக்கு கிடைத்த தகவலின்படி பிறகட்சியை 30 மாஜி எம்.எல்.ஏ'க்கள் விரைவில் பா.ஜ.க'வில் இணைய உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது நடந்தேறும் பட்சத்தில் தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு அது ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Similar News