தமிழகத்தில் உள்ள 31,000 மெகாவாட் மின் தயாரிக்கும் சக்தியை பயன்படுத்துங்கள் - முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுரை!
"தமிழ்நாட்டில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு, மின்திறன் உள்ளது அதனை பயன்படுத்துங்கள்" என ஆளும் தி.மு.க அரசுக்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவுரை கூறியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறும்போது, "தமிழ்நாட்டில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு, மின்திறன் உள்ளதாகவும், அதனை அரசு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தி.மு.க அரசிற்கு அறிவுரை கூறினார்.
மேலும் பேசிய அவர், "தற்போது மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், ஏற்கனவே இருந்த அ.தி.மு.க அரசு மீது, தவறான குற்றச்சாட்டை தெரிவித்து வருவது சரியல்ல" என்றும் அவர் கன்டனம் தெரிவித்தார்.