கட்சித் தாவலுக்கு பயந்து 35 கவுன்சிலர்களை கேரளாவுக்கு டூர் அழைத்துச் சென்ற தி.மு.க

Update: 2022-02-23 14:00 GMT

கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற 35 தி.மு.க கவுன்சிலர்களை இரவோடு இரவாக கேரள மாநிலத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகளில் தி.மு.க 44 இடங்களில் வெற்றி பெற்றது, அ.தி.மு.க 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இதுதவிர ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயச்சை உறுப்பினர் ஆகியோர் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றனர்.


இந்நிலையில் வருகிற 4ஆம் தேதி மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது. தி.மு.க தனி மெஜாரிட்டியுடன் மாநகர மேயர் பதவியை கைப்பற்ற இருப்பதால் அதற்கு முக்கிய கவுன்சிலர்கள் குறி வைத்துள்ளனர். அதேபோல் துணை மேயர் பதவிக்கும் பல பிரமுகர்கள் இப்பொழுதே காய் நகர்த்தி வருகின்றனர்


இந்நிலையில் தி.மு.க கவுன்சிலர்களை யாரேனும் கடத்தி அல்லது ஆசைகாட்டி விலைகொடுத்து வாங்கி விடக்கூடாது என்பதற்காக 35 கவுன்சிலர்களை நேற்று இரவே கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கேரளாவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர் நெல்லை மாவட்ட தி.மு.க'வினர். அவர்கள் அனைவரும் வரும் இரண்டாம் தேதி உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது தான் நெல்லை வருவதாக கூறப்படுகிறது.


வெற்றி பெற்ற தங்கள் கட்சியினரை நம்பாத தி.மு.க 35 கவுன்சிலர்களை கிட்டத்தட்ட கடத்துவது போல சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Source - Maalai malar news

Similar News