ஆளுநர் அஸ்திரம் 356 - கலைகிறதா திமுக ஆட்சி?

Update: 2023-05-09 02:13 GMT

கலைக்கப்படுகிறதா திமுக ஆட்சி?

திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை சீண்டி வந்து கொண்டே உள்ளது. தற்பொழுது மீண்டும் திமுக அரசு ஆளுநரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது, தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநரின் செலவு கணக்கில் விதிமீறல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் திமுக அரசை வன்மையாக சாடினார். திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் மட்டுமே, மேலும் திராவிட மாடல் ஒரு காலாவதியான கொள்கை அதனை உயிர்ப்புடன் வைக்க வேண்டும் என்று திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. அதோடு ஒரே பாரதம் ஒரே நாடு என்று கொள்கைக்கு எதிராகவும் திராவிட மாடல் செயல்படுகிறது என்று கூறியிருந்தார் ஆளுநர். அதே ஆளுநர் மாளிகை நிதி குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மீது சுமத்தி இருந்த குற்றச்சாட்டை பற்றி கேள்வி எழுப்பியதற்கு அது முற்றிலும் அப்பட்டமான பொய் என்று பதில் அளித்துள்ளார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த காரசாரமான கருத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் அதில் திராவிட மாடல் அரசு படைத்த சாதனை திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை திசை திருப்பும் வகையில் சிலர் திரிவு வேலைகளை செய்கின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆளுநரின் பேச்சுக்கு திமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள ஆர் எஸ் பாரதி ஆளுநர் இவ்வாறு கட்சியை பற்றி பேசக்கூடாது அவரவர் தனது பணியை மட்டும் பார்க்க வேண்டும் அவர் இப்பொழுது தனது வரம்பை மீறி பேசியுள்ளார் ஆதலால் அவர் ஆளுநராக இருக்க தகுதியே இல்லை என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இப்படி ஆளுநருக்கும் திமுக அரசிற்குமான மோதல் தற்பொழுது உச்சத்தை எட்டி உள்ள நிலையில் 356 ஐ பயன்படுத்தி திமுக அரசை கலைக்கலாம் என்ற பேச்சுக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் சட்டவிரோதமான செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு போதை பொருட்கள் சகஜமாக கிடைக்கப் பெற்று அதனை பயன்படுத்துகின்றனர் இதனை முதல்வர் தான் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் முதல்வர் ஸ்டாலினால் இதனை சரி செய்ய முடியாது ஏனென்றால், அவர் பொம்மை முதல்வராகவும் ரிமோட் முதல்வராகவும் இருக்கிறார் நிர்வாகத்தில் திறனும் இல்லை இதனாலேயே தமிழகம் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறது. பல வன்முறைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

தற்போதும் திமுக அரசின் மீது ஆளுநர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பாகிஸ்தானிலிருந்து போதை பொருள்களும் ஆயுதங்களும் எளிதாக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது என்று குற்றம் சாடி இருக்கிறார் ஆளுநர். ஆதலால் ஆளுநர் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் முன் வைக்காமல் 356 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும் என்றும் அதுவே தமிழகத்திற்கு ஏற்றதாக இருக்கும் இதன் மூலமாக ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்கிறார்' என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று தனது கண்டனத்தை நேரடியாக முன் வைத்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்களே ஆளுநர் 356 வது சட்ட பிரிவை பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும் என்று சாடி இருப்பது, இந்த விஷயம் சாதாரணமானதாக அல்ல வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று அனைத்து வட்டாரங்களும் பேசிக்கொள்கின்றனர். ஏற்கனவே ஆளுநர் எந்த ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் முழுதும் அதற்கான ஆதாரங்களை அவர் வைத்திருப்பார் என்று மூத்த பத்திரிகையாளராக உள்ள சவுக்கு சங்கர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இப்படி கூறி இருப்பது திமுக அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் ஆளுநர் 356 வது சட்டத்தை பயன்படுத்தி அரசை கலைக்கலாம் என்ற விமர்சனம் தற்போது எழுந்து உள்ளதால் அறிவாலயமும் பதட்டத்தில் உள்ளது.

Similar News