நடந்து முடிந்த உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 387 தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உபி தேர்தலில் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என்று மொத்தமாக 4,442 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,522 பேர் தங்களது டெபாசிட் தொகையை இழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அங்கு வெளிவந்த முடிவின்படி 273 இடங்களில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறது. அதே சமயம் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் 399 பேர் போட்டியிட்டனர். அதில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்ற 387 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளனர். மொத்தம் 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Facebook
Image Courtesy: The Statesman