மேற்கு வங்காள தேர்தல் வன்முறை.. விசாரிக்க பா.ஜ.க எம்.பி.க்கள் 4 போ் கொண்ட குழு..

Update: 2024-06-17 09:40 GMT

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தோ்தலுக்குப் பின் வன்முறை குறித்து விசாரிக்க பாஜக எம்.பி.க்கள் 4 போ் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா அமைத்தாா். இந்தக் குழுவில் MPக்கள் பிப்லப் குமாா் தேப், ரவி சங்கா் பிரசாத், பிரிஜ் லால், கவிதா படிதாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். 18வது நாடாளுமன்ற தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்து இருக்கிறது. தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவினரை குறிவைத்து மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினா் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.


இது தொடா்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும்தான் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. வாக்காளா்கள் மற்றும் எதிா்க்கட்சித் தொண்டா்கள் மீது திரிணாமுல் கட்சியை சோ்ந்தவா்கள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியும் மிரட்டியும் வருகின்றனா். ஆனால், முதல்வா் மம்தா பானா்ஜி வன்முறையைப் பாா்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறாா். கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஜூன் 18-ஆம் தேதி இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் பாஜக சாா்பில் 4 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அத்துமீறல்களைக் கவனத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் மத்திய ஆயுதக் காவல் படையின் இருப்பை ஜூன் 21-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் நீட்டித்து உள்ளது. வன்முறை தொடா்பான விசாரணைக்கு 2021-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தோ்தலுக்குப் பிறகும் இதேபோல் வன்முறை நடைபெற்றது என்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News