சொடக்கு போட்டு அண்ணாமலை விதித்த 48 மணி நேர கெடு - ஒரே நாளில் அலறிக்கொண்டு ஓடிய திமுக அமைச்சர்!
அண்ணாமலை அடித்த அடி! அலறிச்சென்ற திமுக அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் டெக் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் இந்த டெட் தேர்வில் புதிய முறையை அறிமுகப்படுத்தியது அப்போதைய ஆளும் அரசு. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றொரு போட்டி தேர்வை சந்தித்து அதில் தேர்ச்சி பெற்ற பிறகு பணியில் அமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டது. மேலும் இதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு தங்களது177 வது தேர்தல் வாக்குறுதியாக டெட் தேர்வில் மற்றொரு போட்டி தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டு இருந்தது அதன்படி ஆசிரியர்களும் திமுகவிற்கு வாக்களிக்க திமுகவும் 2021 ஆம் தேர்தலில் வெற்றி பெற்றது தற்போது திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களது வாக்கை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றி வருகின்றனர் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நல சங்கம் சார்பில் அந்த சங்கத்தின் தலைவர் கபிலன் சின்னசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படி கடந்த ஐந்து நாட்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் கூட இல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்ட இடத்திற்கு சென்று உங்களுக்காக நாங்கள் எடுக்கிறோம் உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மேலும் உங்களுக்காக நாங்கள் இறங்கி போராட தயாராக உள்ளோம் என்று ஆசிரியர்களுக்கு நம்பிக்கை கூறினார்!
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், இன்னும் 48 மணி நேரத்தில் திமுக அரசு இவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த போராட்டத்தில் பாஜக கலந்து கொள்ளும் நானும் கலந்து கொள்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இப்படி அண்ணாமலை கூறிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் திமுக அமைச்சர் பொன்முடி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்களை சமாதானப் படுத்தி உள்ளார். அண்ணாமலை இறங்கி அடித்த ஒரே அடி திமுக அமைச்சர் பொன்முடியை ஒரே நாளில் பட்டதாரி ஆசிரியர்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூற வைத்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை சொல்கிறார் திமுக அரசு செய்கிறது என சமூக வலைதளங்களில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.