கோவை தொகுதியில் உள்ள 492 பூத்கள்.. தி.மு.கவை விட அண்ணாமலைக்கே ஓட்டு அதிகம்..

Update: 2024-06-09 12:03 GMT

கோவை நாடாளுமன்ற தொகுதியில், பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்கள் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் திமுகவிற்கு நல்ல ஒரு போட்டியை கொடுத்தார் என்று கூறலாம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், 492 பூத்களில், தி.மு.க வேட்பாளரை விட, 44, 389 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவனம் ஈர்த்திருக்கிறார். இது குறித்து தற்போது விரிவான தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட ஒரே காரணத்தால், தேசிய அளவில் கோவை தொகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு, பலதரப்பிலும் இருந்தது. பல்லடம், கவுண்டம்பாளையம், சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வலு சேர்த்ததால், 1,18,068 ஓட்டுகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை. இந்த மூன்று தொகுதிகளில் மட்டும், வலுவான திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என்கிற இரு அணிகளுக்கு இடையே, 4,50,132 ஓட்டுகள் பெற்று அண்ணாமலை இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். இது, 32.79 சதவீதம்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகளை ஆய்வு செய்ததில், மொத்தமுள்ள 2,048 பூத்களில், 492 பூத்களில் திமுகவை விட, அண்ணாமலைக்கே அதிக ஓட்டு பதிவாகி இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில்-128, வடக்கில்-105, சிங்கா நல்லுாரில்-113, கவுண்டம்பாளையத்தில்-127, சூலுாரில்-83, பல்லடத்தில்-63 பூத்களில் பாஜகவுக்கு திமுகவை விட அதிக ஓட்டு பதிவாகியுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News