அரசு பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது!

Update: 2022-01-11 02:59 GMT

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு வழித்தடத்தை மாற்றி தருகிறேன் என்று கூறி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திமுக தொழிற்சங்க நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தாரமங்கலத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வரும் பரமசிவம் என்பவர் வெளியூர் வழித்தட பேருந்தில் இருந்து தன்னை உள்ளூர் வழித்தடத்திற்கு பணி மாற்றம் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த திமுக தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன் நேரடியாக பரமசிவத்தை அணுகி ரூ.10 ஆயிரம் கொடுத்தால் கேட்கின்ற இடத்திற்கு பணி மாறுதல் வாங்கிக்கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் இதனை அவர் நிராகரித்துவிட்டு, நேரடியாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.

போலீசார் ஆலோசனையின்படி பரமசிவம் தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் முதல் தவணையாக 5 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குணசேகரனை கைது செய்தனர். ஒரு ஆளும்கட்சியில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இப்படி லஞ்சத்தை மட்டும் வாங்குவதை குறிக்கோளாக வைத்திருப்பது சரியில்லை என்று பொதுமக்களே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News