நீலகிரி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி - குவிந்த 5 மாவட்ட எஸ்.பி'க்கள்! கப்சிப் ஆன கறுப்புக்கொடி'காரர்கள்

Update: 2022-04-23 11:45 GMT

அரசுமுறைப் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் ஆளுநருக்கு தமிழக அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு வரும் திங்கள்கிழமை துவங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஒரு வார பயணமாக தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி இன்று மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகிறார், இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டிக்கு பயணம் செய்கிறார் அங்கு ராஜ் பவன் மாளிகையில் தங்குகிறார்.

தொடர்ந்து ஒரு வாரம் ஊட்டியில் தங்கும் கவர்னர் 30'ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

கடந்த 19'ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் விழாவில் பங்கேற்பதற்கு காரில் சென்ற பொழுது கருப்புக்கொடி ஏந்தி கலவரத்தில் ஈடுபட்ட முயன்ற போராட்டக்காரர்களால் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு மீது மிகுந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்றைய ஆளுநர் பயணத்தின் போது அது போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வண்ணம் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.


இன்றும் நீலகிரி வரும் ஆளுநருக்கு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சில இடதுசாரி அமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் 2,000 போலீசார் நீலகிரியில் 600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai Malar

Tags:    

Similar News