ஆனந்த கண்ணீருடன் 50 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய சௌமியா அன்புமணி!

Update: 2025-03-18 16:49 GMT

கார்த்திகை மார்கழி மற்றும் தை மாதங்களில் கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாசி மற்றும் பங்குனி மாதங்களில் சில பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர் இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வந்துள்ளார் 

மேலும் அவர் சபரிமலையில் 18 ஆம் படியை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் வடிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது ஏனென்றால் 18 ஆம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய 50 ஆண்டுகால வேண்டுதல் மற்றும் என்னுடைய சிறு வயது கனவு அது இன்று நிறைவேறி உள்ளது என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

Tags:    

Similar News