சிக்கிமின் 50வது ஆண்டு:750 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
இன்றும் மே 29 மற்றும் நாளை மே 30 ஆகிய இரண்டு தினங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மேற்கு வங்காளம் பீகார் உத்திர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்த பயணத்தின் பொழுது ரூபாய் 69,420 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் சிக்கிம் உருவாகி 50 வது ஆண்டு விழாவில் பங்கேற்க விரும்பினேன் ஆனால் வானிலை அங்கு வரவிடாமல் செய்துவிட்டது வளமிக்க மாநிலம் சிக்கிம் இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது என பேசி பஹல்காம் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மற்றும் ஒற்றுமையின் மீதான தாக்குதல் ஆகும் அதற்கான பொருத்தமான பதிலடி தற்போது கொடுத்துள்ளோம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத உள் கட்டமைப்பு மற்றும் பல விமான தளங்களை அழித்து உள்ளோம் என பேசினார்
முன்னதாக நம்சி மாவட்டத்தில் ரூபாய் 750 கோடி மதிப்பில் 500 படுக்கையுடன் கட்டப்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனை பயணிகள் ரோப் வசதி மற்றும் வாஜ்பாய் சிலை போன்றவற்றை பிரதமர் காணொளி மூலம் திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பீகாருக்கு சென்ற பிரதமர் ரூபாய் 1,200 கோடி செலவில் கட்டப்பட்ட பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையை கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்