"அநியாயமா பொங்கல் பரிசு நிதியில் இப்படி 500 கோடி ஊழல் பண்ணிட்டீங்களே" - தி.மு.க'வின் ஊழலை அம்பலப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

Update: 2022-01-20 12:45 GMT

இந்தாண்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பின் நிதியில் 500 கோடி ரூபாய் தி.மு.க ஊழல் செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பகீரங்கப்படுத்தியுள்ளார்.



இந்த பொங்கல் பண்டிகைக்கு தி.மு.க அரசு பணம் தராமல் வெறும் பொருள்கள் மட்டுமே பரிசுப்பொருள்கள் என கூறி மக்களிடத்தில் வழங்கி வருகிறது. அதிலும் 21 பொருள்கள் என கூறி பல இடங்களில் குறைவான பொருள்களையும், பல இடங்களில் உருகிய வெல்லம், மிளகுடன் இலவம் பஞ்சு கொட்டை, மிளகாய் தூளுடன் மரத்தூள் என மிகவும் மோசமாட தரமற்ற பொருள்களை மக்களுக்கு பரிசு என கூறி வழங்கியது. பல இடங்களில் புகார் எழுந்த நிலையில் இதனை முதல்வர் ஸ்டாலின் மறுத்தார் பின்பு புகார்கள் அதிகமாகவே வாய் திறக்காது மௌனமானார். மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் 500 கோடி ரூபாய் தி.மு.க இந்த திட்டத்தில் ஊழல் செய்ததாக பகீரங்கப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி 'பொங்கல் பரிசுப்பொருளில் தரமற்ற பொருள்களை வழங்கியதாகவும், சில இடங்களில் 16 பொருள்கள் மட்டுமே வழங்கியதாகவும் தெரிவித்தார். இதற்காக ஒதுக்கப்பட்ட 1300 கோடி நிதியில் முறைகேடாக 500 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.


Source - Junior Vikatan

Similar News