5G ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த பரிந்துரைகளை இந்த வாரம் அரசுக்கு TRAI சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் வெளியாகியள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 5G அலைக்கற்றை ஏலம் குறித்த தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளது என்று ET Now செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் இந்த வாரம் தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்கள் ET NOW செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. 5G ஏலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நுணுக்கங்கள் பற்றிய TRAI இன் பார்வைகள் மிக முக்கியமானவை, ஏனெனில் அவை 5G சேவைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பான விதிமுறைகள், சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை
ஆராய்ந்து அமல்படுத்த உதவியாக இருக்கும், மேலும் ஐந்தாம் தலைமுறை சேவைகளின் ஏலங்கள் மற்றும் அடுத்தடுத்த வெளியீடுகளுக்கான வேகத்தை துரிதப்படுத்தும். முன்னதாக, ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான TRAI யிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, ஏலத்தில் முறையான சுற்றுகளைத் தொடங்க அரசாங்கம் 60-120 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளது என்று பிசினஸ் டுடே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு செயலர் கே.ராஜாராமன் பிப்ரவரியில், TRAI யிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்ற நாளில் இருந்து ஏலத்தைத் தொடங்க DoTக்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறியிருந்தார். DoT இன் படி, 4G சேவைகளை விட 5G பதிவிறக்க வேகத்தை 10 மடங்கு வேகமாக இணையதள சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.